சனி, 18 ஏப்ரல், 2020

மனந்திறந்த மடல்

இந்து என்பதை விட இந்தியா என்பது பல தர மத,மொழி,சாதியினரைக் கொண்டது.வட மாநிலங்கள் தென் மாநிலங்கள் என்ற வேறுபாடும் உண்டு.
சமீப காலமாக ஒரு தகவல் பரிமாற்றப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
சரித்திரத்தைக் குப்பை கிளறுவது போல் கையாள்வதில் உடன்பாடில்லை. நடந்தவற்றை மாற்ற இயலாது.
சமுதாயத்தில் புரையோடிய இவைகள் எரிமலைக் குழம்பாய் அவ்வப்போது குழம்பைக் கக்கி அடங்கும்.
உயர்சாதி கீழ் சாதி
மொழி வேற்றுமை
பிராந்திய வேற்றுமை
ஊழல் முதலைகள்
அரசியல் சாக்கடை
ரவுடிகள் ராஜ்யம்
அந்நிய ஊடுருவல்
அதிகாரிகளின் கறைபடிந்த கரங்கள்
இயற்கையைக் கொள்ளையிடுதல்
தரமற்ற அமைச்சர்கள்
முறையற்ற கல்வித்தரம்
பண முதலைகள்
எதிலும் வியாபார நோக்கம்
பல மதங்களும் உள்ள வெளி நாட்டினரின் உதவி நமக்குத் தேவை
மத்திய கிழக்கு மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் குரூட் ஆயில்
அந்நிய முதலீடு
அந்நிய தொழில் நுட்பம்
இப்படி பலவகை
வேற்றுமையில் ஒற்றுமையே நமது வலிமை
அஸ்திவாரத்தையே ஆட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது பலருக்குத் தெரியவில்லை. கடிவாளமிட்ட குதிரை இங்கே உதவாது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு வகை செய்தல் நலம்.
தமிழனைத் துரத்திவிட்டு சிங்கப்பூர் வளம் கொழித்த நாடாகவில்லை. இந்தியர்கள் மற்ற நாட்டுக் குடிமகன்களாக அங்கே பிறந்ததால் ஆகவில்லை.
சிந்திக்க மட்டுமே. பதில் தேவையில்லை.
இந்தப் பதிவு உங்கள் கொள்கைக்கு மாறானால் அகற்றி விடுங்கள்...
எதனையும் ஆழமாய்ச் சிந்தியுங்கள். உலகம் மிகப் பெரியது.
இதில் அரசியலில்லை,மனக்குமுறல் மட்டுமே.

கருத்துகள் இல்லை: