ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தாமரைத் தோட்டம், பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம்-3
1967 ஆகஸ்ட்லே தம்பி கருணாகரன் பிறந்தான் அந்த வீட்டிலே. அம்மாவுக்கு உடல்நலம் குறைய ஆரம்பித்த காலம். பலநேரங்களில் குழந்தையைச் சரியாக கவனிப்பதில்லை.
தாமு மாமா (தாய் மாமா) இந்தக் கால கட்டத்தில் தான் எங்க வீட்டில தங்கி இருந்தார். போஸ்டல் டிபார்ட்மெண்ட், ஆனந்த் தியேட்டர் பக்கத்துலே அவரது மெயில் மோட்டார் ஆபீஸ்.
சென்னை கிறித்தவக்கல்லூரி. உயர்நிலைப் பள்ளிலே நுழைவுத்தேர்வு எழுதி 6A section சேந்தாச்சு. குவார்ட்டர்ஸ்லே இருந்து நடந்து சேத்துப்பட்டு பிரிட்ஜிலே இருந்து கீழே இறங்கி இரயில் தண்டவாளத்த கடந்து ஸ்கூல் பின்பக்க கேட் வழியா போவேன்.
இஸ்மாயில்னு குவார்ட்டர்ஸ்லே இருந்து என் வகுப்பேலே சேந்தான். சில சமயம் இரண்டு பேரும் ஒண்ணா போவோம்.
நண்பர்கள் அதிகம் இல்ல அப்ப. இராஜேந்திரன், இஸ்மாயில், மூர்த்தி, தாமு இவங்க தான்.
அப்பாவோட இப்ப மாமாவும் சேந்து கண்டிப்பு. படி படி மந்திரம் தான். ரேடியோல பட்டௌடி, பரூக் இஞ்சீனீயர் ஆடறது கேப்போம் பக்கத்து வீட்டுலே.
பெரும்பாலான பசங்க ரௌடி மாதிரி நடந்துப்பாங்க. அதனாலே விலகியே இருப்போம்.
காத்தாடிலாம் வாங்க காசு இல்ல.வேடிக்கை பாக்கறதோட சரி. 1969லே மாமா கல்யாணம் ஆகி வேற வீட்டுக்குப் போயிட்டார்.
அம்மாவும் மனநலமில்லாம இரண்டு தடவ ஹாஸ்பிடல்லே சில மாதங்க இருந்தாங்க. மிகவும் கவலையா இருக்கும் அவங்கள பாக்க.
மாமாவுக்கு கல்யாணமாகி சில நாள்ளேயே அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணி சித்திய வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டார்.
நாங்க சின்ன பசங்க ஒண்ணும் செய்ய முடியலே. மாமா கல்யாணத்த தடுக்க எவ்வளோ முயற்சி பண்ணியும் முடியலே.
அப்பாவோட பேசறத குறைச்சுட்டேன். படிக்கறது, தூங்கறது தவிர வீட்டுலே இருக்கிறது குறைஞ்சுச்சு. பக்கத்து வீட்டுலே எல்லாருக்கும் என்ன பிடிக்கும். ரொம்பவே கவனிச்சுப்பாங்க.
கடவுள் ஏதோ ஒரு வடிவுலே நமக்கு உதவறார்னு நம்புவேன். படிப்பு மட்டும் விடாம நல்லா படிக்கனும்னு வைராக்யம் மனசுலே இருக்கும்.
(வளரும்)

கருத்துகள் இல்லை: