ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

எல்லைக்கோடு

ஓடிக் கொண்டே இருந்தேன் ஓயவில்லை
தேடிப் பொருள் நிதமும் ஓடினேன்
நாடித் துடிப்பு அடங்கும்வரை ஓடினேன்
கோடிச் செல்வம் போதவில்லை தேடினேன்
வாடிப் போகும் வரை உழைத்தேன்
வாலிபம் முடிந்து வயோதிகம் வந்தது
நிற்காமல் ஓடினேன் திசையெல்லாம் தேடினேன்
நிலையற்ற வாழ்க்கை நிகண்டுகள் சொல்லின
நிம்மதி வேண்டியே நித்திரையும் துறந்தேன்
இயற்கை ஒன்றே இருப்பதை மறந்தேன்
இறப்பும் பிறப்பும் நம்வசம் இல்லை
கண்களை மூடியே கனவில் நுழைந்தேன்
கற்பனை உலகில் தொலைதூரம் சென்றேன்
எல்லைக்கோடு எதற்கும் உண்டெனக் கண்டேன்
எதிர்கொள்ள ஆயத்தமாய் எழுந்து நின்றேன்

கருத்துகள் இல்லை: