சனி, 18 ஏப்ரல், 2020

பொங்கட்டும்

நிலமதை உழுது நீரதில் தேக்கி
நெல்மணிகள் தூவி நாற்றுவளர விட்டு
இலைதழை சாணம் உரமாய் இட்டு
நாற்றுதனைப் பிடுங்கி வரிசையாய் நட்டு
நெற்கதிராய் வளர்ந்து நெல்மணிகள் சுமந்து
கதிரறுத்து களத்தில் பதரைப் பிரித்து
காயவைத்து உலக்கையால் குத்திய‌ புத்தரிசி பச்சரிசியாய்
களிமண்ணில் செய்த அடுப்பில் புதுப்பானையில்
பொங்கி வரும் வேளை தன்னில்
புத்தாடை அணிந்த மக்கள் கூச்சலிட்டு
பொங்கலோ பொங்கல் என்று உளம்பொங்க
கதிரவனுக்குக் கரும்பு மஞ்சளுடன்
படையலிட்டு
களித்துண்ணும் நாளிதுவாம் நம்நாட்டில்
இயற்கை அன்னைக்கு இறையன்பு உண்டென்பதால்
இந்நாளில் மகிழ்வு பொங்கட்டும் திக்கெட்டும் !

கருத்துகள் இல்லை: