சனி, 18 ஏப்ரல், 2020

தூய்மையாக்கு மனவெளி

இருந்திடும் காலம்தனில் இன்புற்று இருப்போமே
இல்லையே நட்பினும் பெரிதொன்று இவ்வுலகினில்
கற்பதும் கேட்பதும் கல்வியாய்க் கொள்வோமே
நிற்பதும் நிலைப்பதும் அன்பெனும் ஒன்றேயாகும்
பற்பல வேற்றுமை பாரினில் உண்டுதானே
பாசத்தின் கயிற்றாலே கட்டிட இயலும்தானே
என்னிலும் உன்னிலும் எதுவுமே நிரந்தரமில்லை
ஏனிந்த விளையாட்டு நமக்குள்ளே அறிவோமா
உணர்வுகள் மேலோங்கி உன்மத்தம் சிலநேரம்
உண்மை உறவுகள் துறப்பதும் முறையாமோ
கொள்கைகள் மனதினில் கோடிகள் இருக்கலாம்
கொட்டிடு அவைகளை தூய்மையாக்கு மனவெளி!

கருத்துகள் இல்லை: