சனி, 18 ஏப்ரல், 2020

பலவித பயணங்கள்

வாழ்க்கையின் சித்து விளையாட்டில் பயணங்கள் ஒரு பிரிவு
நடைப் பயணம் முதவ் நடுவானப் பயணம் வரை.
விரல் பிடித்து நடந்த காலம் தொடங்கி நடை தளர்ந்த காலம் வரை பயணங்கள் தொடர்கதை
விடுமுறைகள்லே சொந்தக்காரங்க வீடுகளுக்கு போறதுல தொடங்குச்சு. பள்ளிலே கல்லூரிலே என்சிசி கேம்ப். கல்விப் பயணம்னு தென்னிந்தியா வட இந்தியா பயணங்க. தோழர்களோட போறப்ப வித விதமான அனுபவங்க.அந்த வயசுக்கேத்த குறும்புங்க. பொண்ணுங்கள பாத்தா ஈர்ப்பு.
படிப்ப முடிச்சு வேலைக்கு சேந்த பிறகு பயண திசைகளும் மாறிடும். வேல நிமித்தம் வெவ்வேறு ஊருங்க. திடீர்ப் பயணங்க. சில நேரங்கள்ளே சிரமமான பயணங்க.
குடும்ப வாழ்க்கைய ஆரம்பிச்ச பிறகு மனைவியோட பிள்ளைங்களோட சுற்றுலாக்கள். கண்களுக்கும் உடலுக்கும் சுகமான இடங்கள தேடி இந்த பயணங்கள்.
வெளி நாட்டுப் பயணங்க வரப்ப இன்னும் சுவாரசியமான விசயங்க. பாஸ்போர்ட்,விசா, டாலர் இப்படி பல. ஒவவொரு பயணமும் மறக்கமுடியாத ஆழமாய்ப் பதிந்த நினைவலைகள்.
வானிலை மாற்றங்க போல இயற்கை நிகழ்வுங்க, போர் பதற்றங்க,தொற்று நோய் பரவல்கள்னு எதிர்பாரா நிகழ்வுகள்ளே பயணங்க நிலை தடுமாறது உண்டு.
மறக்க முடியாத சம்பவங்கள் பலவும் பல பயணக்கட்டுரைங்களா. வாழ்வுலே ஒரு அங்கமாவே பயணங்க. இன்ப அனுபவங்கள் துன்ப அனுபவங்கள் விசித்திர நிகழ்வுகள்னு கூடவே பயணிச்சுக்கிட்டு இருக்கும்.
சாகசத்துக்குனு பயணிக்கற பயணங்க, உயிரப் பணயம ்வச்ச பயணங்கனு பலவித பயணங்கள்.
தொடர்கதையாய்.
சதாப்தி
பெங்களூர் சென்னை

கருத்துகள் இல்லை: