ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஊனமுற்ற மனங்களே

இன்று என் நண்பன் நாளை எதிரியாவானோ
என்று சுதந்திரம் என்று தானே கேட்டேன்
எதிரிகள் வெளியிலா இல்லை எமது மண்ணிலா
உதிரிகள் அங்கங்கே கொக்கரிப்பு சரியில்லை மக்களே
நம்மை நாமே அழித்துக்கொண்டுள்ளோம் என்பதே உண்மை
எம்மை மாற்றியது யார் சொந்த வீட்டில்தீ
விழித்தபடி உறங்கும் கூட்டம் விட்டில் பூச்சியாகும்
பழிப்பது ஒன்றே பணியென மற்றொன்று சுடுகாட்டில்
தாய்த்திரு நாடே கங்கை நதிப்புர கோதுமையெங்கே
பேய்கள் நடமாடும் பாலைவனமாய் மாறிடுமோ இம்மண்
தொலைதூரச் சங்கு காதில் சன்னமாய் கேட்கிறது
தொலைந்திடுவேனோ நானும் காற்றினில் கரைந்தே
ஊளையிடும் நரிக் கூட்டம் ஊரில் அடங்குமோ
ஊனமுற்ற மனங்களே உணருங்கள் உண்மையை விடிவதற்குள்!

கருத்துகள் இல்லை: