ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பறவைகள் பலவிதம்

காக்கைகள் கரைந்து தன்னினம் அழைக்கிறது
கருப்பாய் இருத்தலைத் தவிர பிரிவில்லை
கிளிக்கூட்டம் பழமரம் தேடி கீச்சிடுகின்றன
கிளிப்பச்சை நிறமும் இளஞ்சிவப்பு மூக்குமாய்
சிட்டுக்குருவி முற்றங்களைத் துறந்து தொலைந்தன
சிற்றூர்களில் சிலநேரம் காணக் கிடைக்கின்றன
வட்டமிடும் கழுகு வானத்தில் பறக்கிறது
வகையான உணவு மட்டுமே நோக்கமென்று
குயில்கூவி இசைபாட தோப்பு வேண்டும்
குரலினிமை அழகு கருமை நிறமானாலும்
புறாக் கூட்டம் உயர்மாட வாசம்
பறக்கும் உயரம் வானின் உச்சம்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
உறவினில் உன்னதம் உண்மை அதுதானே !

கருத்துகள் இல்லை: