ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கையோசை

ஒரு கையால் ஓசை வராது
இரு கையாலே ஓசை வரும்
வளை ஓசை வேறு வகை
அலை ஓசை இதில் அடங்கா
குயில் ஓசை குரல் இனிமை
குழல் ஓசை நாதம் கீதம்
இரயில் ஓசை சிறார் மகிழ்வு
இடி ஓசை சிலநேரம் அச்சம்
இன்று வரும் மக்கள் கையோசை
இவ்வுலகு காணாத கேளாத ஓசை
கரோனா அரக்கனை விரட்டும் ஓசை
மரண ஓலங்கள் மறையும் ஓசை !

கருத்துகள் இல்லை: