சனி, 18 ஏப்ரல், 2020

நட்பாம்

யாருக்கும் நட்பென்ற உறவு வேண்டும்
கருக்கும் மேகத்துக்கு மழையே நட்பாம்
அலையின் ஆர்ப்பரிப்பு கடலின் நட்பாம்
சேலையின் நளினத்துக்கு நூலின் நட்பாம்
கூவும் குயிலுக்குக் குரலே நட்பாம்
தாவும் மானுக்குக் கால்களே நட்பாம்
தவழும் குழந்தைக்கு மழலை நட்பாம்
தள்ளாடும் முதியோர்க்கு கைத்தடியே நட்பாம்
வாலைக் குமரிக்கு வடிவமே நட்பாம்
வாலிப வயதிற்கு துணிவே நட்பாம்
கண்ணுக்கு இமையே என்றும் நட்பாம்
கவிதைக்குப் புலமை உணர்வே நட்பாம்
கல்லூரித் தோழர்க்கு கருத்தாய்வு நட்பாம்
கவிஞர் எமக்கோ உலகோரே நட்பாம் !

கருத்துகள் இல்லை: