ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வாழ்ந்திடும் காதல்

ஆதிமுதல் வந்த காதல் ஆனந்தமானது
போதிமரம் தந்த ஞானம் போற்றுதற்குரியது
கருவறை தொடங்கி கல்லறை முடியும்
பருவத்தில் தொடங்கி முதுமையில் நிறைவுறும்
அன்பின் முகிழ்வே காதலாய் மாறும்
அணைப்பு முத்தம் ஆசைகள் காமம்
பிணைப்பது காதலின் வரவும் வளர்ச்சியும்
தினமொன்று வேண்டுமா என்றும் காதல்தானே
மனதினில் தோன்றி உணர்வினில் கலந்திடும்
குழந்தையில் தொடங்கி குமரி வரையிலும்
குடிகொண்ட காதல் குவலயம் முழுதும்
மென்மையாய் இழையோடும் இதயம் புகுந்திடும்
மெல்லமெல்ல மனதை உருக்கும் மாற்றிடும்
அன்னையின் பாசம் மனைவியின் நேசம்
அண்ணன் தங்கை உறவினர் நண்யர்
எவரினும் உறைந்த அன்பின் நிறைவே
என்றென்றும் வாழ்ந்திடும் காதல் என்பதாம்

கருத்துகள் இல்லை: