ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

காதல் சிறுக்கி

கண்ணாமூச்சி ஆடவா பெண்ணே காத்திருக்கேன்
கன்னக்குழி கலகல சிரிப்பு பார்க்கணும்
கொலுசுச் சத்தம் மல்லிகை வாசம்
கொண்டை முடிச்சு புடவைக் கொசுவம்
மெல்லிய விரல்கள் மேனியின் மினுமினுப்பு
மெத்தையிலே போர்வைக்குள் அணைக்கும் காதல்
எங்கே போனாயோ என்னவளே ஏங்கவிட்டு
எத்தனை நாட்களாய் காத்திருப்பேன் மாமன்நான்
போதுமிந்த பிரிவு விளையாட்டு போக்கிரியே
போனநாட்கள் போனவையே காதல் சிறுக்கி
பொழுது சாயுமுன் வந்திங்கே சேர்வாயா
பொக்கை வாயோடு படுக்கையில் நான் !

கருத்துகள் இல்லை: