சனி, 18 ஏப்ரல், 2020

பிஸினஸ் - பாகம் 3

சுமார் ஐந்து கிமீ சுற்றளவுலே எந்த வீட்டுலே பர்னிச்சர் தேவப்பட்டாலும் சப்ளை பன்றது இல்லாம அளவெடுத்து செய்ற வார்ட்ரோப், செல்ஃப்,கிச்சன் கப்போர்ட்னு சின்னச் சின்னதா ஆர்டர்கள் எடுத்து பண்ண ஆரம்பிச்சோம்.
ஒரே ஒரு பையன் மட்டும் கடைத் தொழிலாளியா இருப்பான். நாராயணசாமின்ற ஒருத்தன் மட்டும் நீண்ட நாட்கள் இருந்தான்.
அதே கடையில ஒரு பத்துக்குப் பத்து ஏரியாலே என்னோட தங்கையின் மகன் முரளி மொபைல் சர்வீஸ் சென்டர் என்னோடவே தொடங்கினான். நான் இல்லாத நாட்கள்ளே கடைய அவன் பாத்துப்பான்.
குவார்ட்டர்லி சேல்ஸ் டாக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் பண்ண ஓர் ஆடிட்டர் வச்சிருந்தோம்.
இதற்கு நடுவுலே என்னோட சகலபாடிக்குத் தெரிந்த ஓமன் ஏஜென்ட் மூலம் மஸ்கட் 2010 ஜூலை ஆகஸ்ட்லே பாலைவனத்துலே பிரிட்டிஷ் பெட்ரோலியம் கேஸ் எக்ஸ்புளோரேஷன் ஒன்ரை மாசம் போய்ட்டு வந்தேன். சீனியர் மெடீரியல் கண்ட்ரோலர்னு. அந்தக் கதைய தனியா சொல்லியிருக்கேன்.
அந்த அனுபவத்துக்கு அப்புறம் என்னோட சொந்தச் செலவுலே செப்டம்பர் 2010லே கோலாலம்பூர் பயணம் பிஸினஸ் இம்ப்ரூவ் பண்ண.
பல பர்னிச்சர் கடைகளுக்கும் ஸ்கிரீன் மெட்டீரீயல்ஸ் மற்றும் நாவல்டி கடைகளின் மொத்த வியாபார தலங்களுக்கும் சென்று வந்தேன்.
ரப்பர் மரத்தாலான பர்னிச்சர் மட்டுமே மலேசிய நாட்டு பொருள். தேக்கு மர பர்னிச்சர்கள் இந்தோணிசியாவிலதான் அவங்களும் வாங்கறாங்கனு தெரிஞ்சுகிட்டேன்.
ஊர்சுத்திட்டு திரும்பவும் பெங்களூர் வந்து வேறு பிஸினஸ் என்ன பண்ணலாம்னு யோசிச்சு குக்கீஸ் மற்றும் ஹோட்டல் சம்பந்தமான ஆராய்ச்சிகள் பண்ணி அதுக்கு நாம ஒத்து வரமாட்டோம்னு விட்டுட்டேன்.
வாடகைதான் செலவினத்துலே பெரும்பகுதிய சாப்பிட்டதுனு தோணிச்சு. குறைவான வாடகைக்கு இடத்த பாக்க ஆரம்பிச்சு மற்றொரு இடத்துலே மெயின் ரோடுலே கிடைச்சது 22000 வாடகைலே.
இடமாற்றம் வேற ஏரியா நல்ல வியாபாரம் ஆகும்னு முடிவெடுத்து அந்த இடத்துக்கு 900 சதுர அடி (1500 சதுர அடி முந்தைய இடம்) கடைய ஷிஃப்ட் பண்ணினோம்.
நினைப்பது ஒன்றாய் நடப்பது வேறொன்றாய் இருக்கும்னு போகப் போக புரிஞ்சுகிட்டேன்.

கருத்துகள் இல்லை: