சனி, 18 ஏப்ரல், 2020

மாயவலை

எதனைச் சாடியும் பயனில்லை கண்டேன்
எவரும் செவிசாய்க்கப் போவதில்லை உணர்ந்தேன்
விழலுக்கு இறைத்தநீர் நெல்லுக்குப் பாயவில்லை
வீணர்கள் நடுவே வீண்பேச்சாய் ஆனது
பட்டுத்தான் அறிவர் பாவியர் இவரெலாம்
சுட்டுவிடும் என்றாலும் தொட்டுப் பார்ப்பர்
மாயவலை ஒன்றில் சிக்கிய மாக்களாய்
தூயவை எவையென்று சீர்தூக்க அறியவில்லை
விட்டில் பூச்சிகள் தெரிந்தே நெருப்பில்
வியப்பாய் மனதில் வருத்தம் கொண்டேன்
வஞ்சகம் நெஞ்சில் வார்த்தையில் வன்மம்
கொஞ்சமும் நினையாமல் கொட்டும் வார்த்தைகள்
அழிவின் ஆரம்பம் ஊழிக்காற்றாய் எங்கும்
அமைதி எப்போதோ அறியேன் அடியேன்
செவிடன் காதில் ஊதிய சங்காய்
செய்வது யாதெனத் தெரியாமல் திகைத்தேன்

கருத்துகள் இல்லை: