ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

நல்லதே நினை

தேடிநிதம் நிம்மதியை ஓடி நின்றாயே
கோடிகோடியாய் பணம்பார்த்து நகைத்தாயே
வாடிநின்ற வறியவர்க்குத் தரமறுத்தாயே
கூடிநின்று கும்பலோடு கும்மாளமிட்டாயே
செடிகொடிகள் அழித்தங்கே மாளிகையாக்கி்
கடிவாளமில்லா புரவியென கபடம்புரிந்தாயே
நாடிநரம்பெல்லாம் முறுக்கேற்றிக் களித்தாயே
நல்லதென்று நானிலத்தில் செய்தாயா
பொல்லாத நோயொன்று வந்ததின்று
சொல்லாமல் உனைஅணத்து வீழ்த்தியது
ஆடியஆட்டமெங்கே மனிதா அடங்கினாயா
உயரப்பறந்ந நீஉயிர்வாழத் துடிப்பதேனோ
வாழ்வதும் வாழ்விப்பதுவும் உணர்ந்தாயா
நல்லதேநினை நல்லதே நடக்கும்

கருத்துகள் இல்லை: