ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

விடைகள் எங்கே ?

கடற்கரைக் காற்று கிழக்கிலா மேற்கிலா
கரைசேரும் அலைகள் நிலைக்குமா திரும்புமா
தொடுவானம் நீலநிறமா சிவப்புக் கம்பளமா
நடுநிசிக் காற்று தென்றலா வாடையா
கதிரவன் கதிரால் நிலவில் ஒளியா
நதிநீரில் மீன்கூட்டம் எதிர்நீச்சல் முயலுமா
சூலுற்ற தாயாமோ மேகக் கூட்டம்
சூடிய மலர்கள் வாசனை யாருடையது
பறவைக் கூட்டம் வானைத் தொடுமா
சிறகை விரித்து மயிலும் ஆடுமா
குரங்குக் கூட்டம் மரங்களில் தாவுமா
குயிலின் கூவல் எவரை அழைக்குது
காடுகள் மலைகள் எப்படித் தோன்றின
வேடுவன் அம்பில் மான்குட்டி தப்புமா
இயற்கை அன்னையின் அற்புதமா அனைத்துமே
இத்தனை கேள்விகள் விடைகள் எங்கே ?

கருத்துகள் இல்லை: