ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தாமரைத் தோட்டம், பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம்-2
அந்த 12 வீடுகளும் பாரத விலாஸ் மாதிரி. சில வீடுகள் காலி செய்யப்பட்டு வேறு குடும்பத்தினர் வருவர்.
மாடி அபார்ட்மெண்ட் டைப் குடியிருப்பை புது குவார்ட்டர்ஸ்னு சொல்வோம். நண்பர்கள் பொதுவா ஒத்த மனசுக் காரங்களா இருப்பாங்க.
இராஜேந்திரன், கோவிந்தம்மா,மூர்த்தி,பிரேமா,பாஸ்கர்,முத்து இப்படி குடும்பத்து மூத்த பிள்ளைங்க பேரோட அடையாளம் காணப்படும்.
என் தங்கை நிர்மலா கைக்குழந்தை அப்ப. ஸ்கூலுக்குப் போவது வருவது,அம்மாவுக்கு சிறு உதவி செய்வது,காத்தாடி விடறத வேடிக்கை பார்க்கறது இப்படி பொழுது போகும்.
1962லிருந்து 1967வரையிலே TELC டெய்லர்ஸ் ரோடு பள்ளிலே அஞ்சாங்கிளாஸ் வரை படிப்பு. கூட படிச்ச சாரா மேலே ஒரு ஈர்ப்பு. அவளுக்கும் எனக்கும் தான் படிப்பிலே போட்டி.
சீசனுக்கு ஏத்த மாதிரி விளையாட்டும் மாறும். பம்பரம்,கில்லி,கோலி,காத்தாடி இப்படி பலவும். புட்பால்,ஹாக்கி எப்பவாவது.
அப்பா ரொம்ப கண்டிப்பு படிப்புலே. காசு செலவுலேயும். அம்மா வெத்தலை போடற பழக்கம். காசு கொடுக்க மாட்டார். அதனாலே அவங்க தையல் இலை தச்சு அத கடைங்கள்ளே வித்து அதுலே அவங்களுக்குத் தேவையானத வாங்கிப்பாங்க.
பால் கொழுக்கட்டை,சுறாப்புட்டு சுவைய அவங்க சமையல்லே யாரும் மிஞ்ச முடியாது. ரொம்ப சாதுவா இருந்ததாலே அப்பாவோட கொடுமைக்கு ஆளாக நேரிட்டு அவங்க அனுபவிச்ச துன்பங்க சின்ன வயசுலே மனசுலே பதிஞ்சு அவர் மேலே வெறுப்பு வளந்துச்சு.
அவர் படிக்கலேனு என்ன அடிக்கறது குவார்ட்டர்ஸ் முழுசுக்கும் தெரியும். முதல் ராங்க் வாங்கும்போதே இப்படி அடிக்கறாரேனு யோசிப்பேன். பொதுவா எல்லாப் பாடத்திலேயும் 90 மதிப்பெண்கள் மேலே தான்.
(வளரும்)

கருத்துகள் இல்லை: