ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வயோதிகன்

நடையது தளர முகமது சுருங்க
இடையது நடுங்க கண்கள் பார்க்குமோ
கொடியிடை காலத்தில் பார்த்த நங்கையை
முடிநரைத்த இந்நாளில் பார்ப்பேனோ அறியேன்
மானின் துள்ளலாய் நடந்த மாதவள்
மருளும் பார்வைக்கு பொருளைத் தேடினேன்
அன்றவள் சென்றவள் என்றவள் தோன்றுவாள்
மன்றம் இதுவன்று மற்றதைப் பேசிட
உலர்ந்த சருகுக்கும் துளிர்க்கும் ஆசைதானே
உண்மையில் யாரிங்கே வயோதிகன் சொல்லுங்கள் !

கருத்துகள் இல்லை: