சனி, 18 ஏப்ரல், 2020

குடியரசு தினம்

குடியரசு தினம் கொண்டாடி மகிழ்வோம்
குடிமக்கள் நலமொன்றே மனதினில் கொள்வோம்
கத்தியின்றி இரத்தமின்றி வந்ததில்லை மக்களாட்சி
புத்திகெட்ட ஆட்சியரை வீழ்த்த தியாகம்பல
ஈட்டிய சுதந்திரம் குடியாட்சி உருவானது
ஊட்டிய நல்லுணர்வு ஏனோ மறைந்தது
திரும்பும் திசையெங்கும் வசைபாடும் நாடகம்
கருப்பு நாட்களாய் பேதமை வார்த்தைகள்
பொறுப்பற்ற சமுதாயம் மீண்டும் தோன்றுமோ
வெறுப்பான சிந்தனை வேரூன்றி விடுமோ
வேதனை மனதில் வேள்வித் தீயாய்
வேண்டாமே இன்னொரு சுதந்திரப் போரொன்று
சமத்துவம் சகோதரம் சகிப்பு சமாதானம்
சாத்தியமே சகோதரரே சிந்திப்பீர் செயல்படுவீர் !

கருத்துகள் இல்லை: