சனி, 18 ஏப்ரல், 2020

புதிய பாரதம் ?

தேங்கிய ஏக்கங்கள் பல தீர்வுதான் இல்லை
வாங்கிய சுதந்திரம் வாடிப் போனதா ஐயமுண்டு
வறுமை வளமாய் ஆனதா பாலாறு தேனானதா
பொறுமை பொறுத்தே பொசுங்கிப் போனது சமாதியில்
ஏய்ப்பவன் வாழ்வதும் ஏமாந்தவன் வீழ்வதும் மாறவில்லை
தாய்த்திருநாடு தரணி போற்றுது உழுதல் இறந்துபோனது
சண்டைகள் பலவும் சாக்கடை நாற்றமாய் இப்போதும்
ஆண்டவன் மாறியும் ஆயிரம் பேதங்கள் அழியவில்லை
நீண்டன சொற்போர் நிறங்கள் பலப்பல நிதமும்
நீதிதேவன் உறக்கம் கொண்டான் இராவணன் தம்பியாய்
புலம்பித் தீர்க்கிறேன் புரண்டும் பார்க்கிறேன் மாற்றமில்லை
புதிய பாரதம் கனவுத் தொழிற்சாலை ஆனதோ ?

கருத்துகள் இல்லை: