சனி, 18 ஏப்ரல், 2020

மூச்சுத் திணறல்

என்னோட சிறந்த நண்பர்களில் இஸ்மாயில், கபீர், அந்தோணி மாற்று மதத்தினர் உண்டு

அவர்களது இல்லங்களில் நான் உணவருந்தியிருக்கிறேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பவர்களின் இல்லங்களிலும் உணவருந்தி இருக்கிறேன்.
நான் பிறப்பால் இந்து. பல நூறு கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். மாதாகோவில்கள், நாகூர் தர்கா போன்ற மசூதிகளுக்கும் சென்றுள்ளேன்.
எதனால் மனிதருக்குள் வேறுபாடு. தொன்று தொட்டே அரசியல் காரணங்களால் உருவாக்கப்பட்டது.
மன்னராட்சியில் நாடு விரிவாக்கம், பெண்ணாசை, பொருளாசை இதனால். தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்பு நாட்டினுடையதாயிற்று. மக்களும் கொள்கை ரீதியாகப் பிரிந்தார்கள்.
தொழில் நிமித்தம் இடையில் ஏற்பட்ட பிரிவுகள் சிலரைத் தாழ்வாகவும் சிலரை உயர்வாகவும் சித்தரித்தது. மனிதனே உருவாக்கிக் கொண்டான். பல மூட நம்பிக்கைகளை அடக்கியாள உபயோகித்தான்.
பின்னர் வந்த பெரியவர்கள் சிலர் கொடூரமான பழக்க வழக்கங்களை ஒழித்து பெண் விடுதலை, முன்னேற்றம், பின் தங்கிய வகுப்பினருக்கும் கல்வி என்ற நல்வினைகளைச் செய்தனர்.
ஒரு சில சாரருக்கு இது பிடிக்காமல் போயிற்று.
மதப்பிரிவினை, மொழிப்பிரிவினை, நாட்டு எல்லைகள், அடிமைத்தனம் இதனால் அவ்வப்போது புரட்சிகள் உலகமெங்கும். சில அமைதியாய் சில வன்முறையாய்.
மனிதர்களில் ஒரு சாரர் மூளைச் சலவை செய்யப்பட்டு மிருகமாய் மாறியதால் பயங்கரவாதம் தலை தூக்கியது. மனிதனை மனிதனே அழிக்கும் மிருகத்தனம் மேலோங்கியது.
காலம் மாறிக் கொண்டே இருப்பது போல் மனிதர்களின் சாயமும் மாறிக் கொண்டே இருக்கிறது. பொய்மை, ஊழல், பொறாமை, பேராசை மலிந்து கிடக்கிறது.
உண்மையும் பொய்யும் ஒருசேர உலவுவதால் யாரை நம்புவதென்றே தெரியவில்லை. சர்வாதிகாரம் தலை விரித்தாடுகிறது.
நல்ல தலைவர்கள் அரசியல் சாக்கடையில் இறங்கத் தயாரில்லை. சமுதாயம் நல்லதொரு எதிர்காலம் நோக்கி ஏங்கியிருக்கிறது.
பேய்களைப் போல சவக்குழியிலிருந்து விழித்த பிணங்களின் கூச்சல் அதிகமிப்போது. இருள், புகை, மாசு எல்லாம் கலந்த காற்றை மட்டுமே சுவாசிப்பதால் மூச்சுத் திணறல் அடிக்கடி.
தூய காற்றின் சுவாசத்திற்கு மனம் ஏங்குகிறது.

கருத்துகள் இல்லை: