சனி, 18 ஏப்ரல், 2020

மாமன் மவளே

மாமானு சொன்னாலே மனசு குளிரும்
மாமரக் குயிலா காதுலே கேக்கும்
மாமோய்னு அவ கூவி அழைக்கியிலே
மனசுக்குள் மத்தாப்பு பொறி பறக்கும்
அவ கால் கொலுசுச் சத்தம் கேட்டாலே
அங்கமெலாம் அதிரும் ஆர்ப்பரிக்கும் உற்சாகம்
கலகலனு சிரிச்சு பேசையிலே சிறுக்கிமவ
கண்ணு மயங்கும் கனவுலகா மாறும்
பாட்டு மட்டும் அவ பாடிபுட்டா
பாவிமவன் என்னாவேன் பாதிஉயிர் போகும்
என்ன மாயமோ ஆத்தா சொல்வா
உன்ன மயக்கி வச்சுப்புட்டா சண்டாளி
மாமன் மவளே நீவாடி புள்ளே
மச்சு வீடுகட்டித் தாரேன் உனக்கு
மடியிலே படுத்து கிட்டு கண்ணசர
மல்லாக்க வானத்த பாத்து வசமிழக்க
கால முச்சூடும் கதை கேட்டு
கண்ணுறங்கச் செய் தாயே காத்திருக்கேன் !

கருத்துகள் இல்லை: