ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஏட்டுக் கல்வி

வேண்டுவது உன்னிடம் ஒன்றுண்டு இறைவா
வேற்றுமை அற்ற உள்ளம் எம்மில்
கூற்றுவன் அழைப்பினில் கூடுதுறக்கும் உயிரது
கூறுகள் போட்டு சண்டையிடல் ஏனோ
சாத்திரம் படித்தும் சாடுதல் முறையோ
கோத்திரம் பலவும் தோன்றியது யாராலே
ஏட்டுக் கல்வி பரணில் பதுங்கிற்று
மேட்டுக் குடியோ மேதைகள் சபையோ
பேதமை பேசியே காலங்கள் போக்கின
வாதங்கள் வர்ணங்கள் பூசிய வேதனை
மானிடம் மரித்து மிருகம் பிறந்தது
ஏனிந்த மாற்றம் ஏற்றத் தாழ்வு
ஒற்றுமை என்றொரு சொல்லும் உண்டு
கற்றுணர் மனிதா கடவுள் ஒருவனே !

கருத்துகள் இல்லை: