வெள்ளி, 24 மார்ச், 2023

ஏனிந்த வேற்றுமை

 மேகம் கறுத்து வானம் இருளுது

காகம் கரைந்து மரமதில் மறையுது
வேகம் எடுத்து மிதிவண்டி ஓடுது
தாகம் தீர்க்க தண்ணீர் தேடுது
ராகம் பாடிய தொண்டை வறண்டு
சோகம் சாலையோர மக்கள் மனதில்
வேகும் வெயிலும் சுட்டது போனது
போகுமா இந்த வாழ்க்கை கேள்வியே
பருவம் மாறுது புதியன தோன்றுது
உருவம் மாறுது உயர வளருது
வறுமை மட்டுமே மாறாமல் உள்ளது
பொறுமை காத்தே வாழ்வும் ஓடுது
உயர்வு தாழ்வு சேர்ந்தே உள்ளது
உயரப் பறக்க உள்ளம் நினைத்தது
மனித வாழ்க்கை விசித்திரம் ஆனது
ஏனிந்த வேற்றுமை கேள்வி தொடருது

கருத்துகள் இல்லை: