வெள்ளி, 24 மார்ச், 2023

மாற்று வழியென்ன

 உன்னிலே என்னிலே உயர்ந்தவன் எவனோ

தன்னிலை உணர்ந்த நல்லவன் அவனே
எதனையும் ஆராயும் மனமே உயர்ந்தது
இதமான சொற்கள் இரக்கம் கொண்டது
மதமென ஒன்று எதனால் வந்தது
மனதில் நல்ல விதைகள் தோன்றவே
மாயையை நம்பியே மனமேனோ இருண்டது
மானிடம் என்பதே மறந்தே போனது
வேற்றுமை பேசுவதே வேதமாய் ஆனது
வேர்கள் உறுதி அற்றதாய்ப் போனது
சாதிகள் மதங்கள் சங்கடம் தந்தது
போதித்த நல்லவை தேய்ந்தே போனது
மாற்றம் வருமென நம்பிக்கை குறைந்தது
மாற்று வழியென்ன யோசித்தே கடந்தது
நடப்பவை என்றும் நன்மைக்கே என்பதோ
கடக்குமா இவை அனைத்தும் என்றாவது ?

கருத்துகள் இல்லை: