வெள்ளி, 24 மார்ச், 2023

மார்கழி

 காலைப் பனி புல் நுனி நிற்க

வாலைக் குமரி வைகறை குளிர் நீராடி
தலை தனில் வெண் துண்டோடு வந்து
வலைந்த கோடுகளில் வகை வகையாய் கோலமிட்டு
நடுவே சாணக் குவியலில் பூசணிப் பூவிட்டு
மாடுகள் தலை ஆட்டி ஒலியுடன் நடக்க
தெரு எங்கும் விழாக் கோலம் விடியலில்
தெற்கே கோயில் வாசலில் பஜனை பாடுவோர்
குளிரின் தாக்கம் மிகுந்த நாளில் புகைபோல்
குளக் கரை நோக்கி துணியைச் சுமந்து
பெண்டிர் கூட்டம் நகையாடி நடந்து செல்ல
பெரிதாய் சத்தமுடன் தூரத்து ஒலி பெருக்கி
மார்கழி பிறந்ததை கட்டியம் கூறிப் பாட
ஊரெங்கும் மகிழ்வாய் காட்சி விரிந்து சிறந்தது

கருத்துகள் இல்லை: