வெள்ளி, 24 மார்ச், 2023

கொதித்து எழு

 கோபம் கொள்ளப் பழகு கொடுமைகள் கண்டு

கோடுகள் தாண்டும் கேவலம் எதுவாக இருப்பினும்
கொதித்து எழு மக்கள் விரோதம் நடப்பின்
மிதித்திடு உமிழ்ந்திடு கயவர் தம் முகத்தில்
கற்றது நல்லவை தெளிதல் வேண்டியே அறிக
மற்றது தீமை பயப்பின் தீயிட்டுக் கொளுத்து
பொய்யரை பொசுக்கிடு பொல்லாத செய்வோரைக் களையெடு
அஹிம்சை சிலநேரம் அநியாயம் அழிய உதவாது
அடியாத மாடு படியாது என்பது பழமொழி
தவறு செய்பவன் தண்டிக்கப் பட்டே ஆகணும்
சொல்வது ஒன்று செய்வது ஒன்றானால் ஏய்ப்பே
வாய்ச்சொல் வீரர் மலிந்த நாடாய் மாறிப்போனது
நல்லவர் எங்கே சல்லடை கொண்டும் காணவில்லை
நரகமாய் வாழ்க்கை நயவஞ்சகர் மிகுந்த உலகில்
புலம்பியே நாட்கள் புலர்வது வாடிக்கை ஆனது

கருத்துகள் இல்லை: