வெள்ளி, 24 மார்ச், 2023

சாதிகள் என்ற சாக்கடை

 தெரிந்தே எரியும் தழலில் பொசுங்கும் விட்டில்

தெரியாதா மானிடா உனக்கும் ஆறடி நிலமே
எரிந்தால் அனைத்தும் சாம்பலாய் மாறிச் சிரிக்கும்
புரிந்தே ஆடுகின்ற ஆட்டம் எத்தனை மனிதா
பேதங்கள் பார்த்தே பேதலித்த மனதைக் கொண்டாய்
மதங்கள் எனும் மாயை கண்களை மறைத்தது
வேதங்கள் சொல்வது ஒன்றே அறியாமல் துள்ளினாய்
வாதங்கள் வர்ணங்கள் வகை வகையாய்ப் பிரித்தாய்
சாதிகள் என்ற சாக்கடை வேறு எங்கும்
வீதிகள் தோறும் சத்தமாய் சாத்தான் வேதம்
எங்கே போகிறாய் மானிடா முடிவே அறியாமல்
அங்கே நிம்மதி உறக்கம் தேடிப் போனாயோ
உனக்குச் சொந்தம் எதுவுமே இல்லை அறிவாயா
உன்னுடன் வருவதும் ஒன்றுமே இல்லை இறுதிவரை
நிறுத்திடு ஆட்டத்தை நிஜத்தை உணர்ந்து கொள்
நிழலும் கூட உனக்குச் சொந்தமில்லை அந்நாளில்

கருத்துகள் இல்லை: