வெள்ளி, 24 மார்ச், 2023

கிராமத்துக் காட்சி

 மலை முகட்டில் கதிரவன் எட்டிப் பார்க்கிறான்

வலை போட்ட மீனவன் மீனுக்காய் காக்கிறான்
சிலை ஒன்று கையுர்த்தி ஏதோ சொல்கிறது
தலை மீது கஞ்சிக் கலயம் சுமந்து
காலை துவக்கம் கிராமத்துக் காட்சி இதுவே
வயலுக்கு நீர் பாய்ச்சி மடை மாறி
வரிசையாய் நாற்று நட்ட பெண்டிர் சேற்றில்
பூட்டிய காளைகளை விரட்டி வந்தான் மற்றவன்
சாட்டையால் அடித்த படி ஏர் உழுதான்
களத்து மேட்டிலே நெல்லைத் துழாவி ஒருத்தி
குளத்து ஓரத்தே துணி துவைத்த மற்றவள்
கிணற்றிலே கோட்டை கட்டிய சிறுவர் கூட்டம்
மணலிலே கோயில் கட்டிய சிறுமியர் சிரிப்பு
அள்ளித் தெளித்து சாண நீர் வாசலில்
புள்ளிக் கோலமிட்டு வண்ணம் தீட்டிய மகளிர்
மெதுவாக விரிந்த காட்சி மனதில் ஓவியமாய்
மெல்லத் துவங்கிய நாளின் இனிய தோற்றம்

கருத்துகள் இல்லை: