வெள்ளி, 24 மார்ச், 2023

காட்டு வழி போறவளே

 காட்டு வழி போறவளே கண்ணம்மா

வீட்டு அருகே வாராம போவதேனோ
ஓட்டு கூரைய ஓயாம பாத்து
பாட்டு ஒண்ணு வந்துச்சு உன்னாலே
மேட்டு் தெருவுலே சந்திச்ச நனவாலே
வேட்டு வச்சு சுட்டுபுட்டே பொண்ணே
சேட்டு கடை கொலுசு சத்தம்
கேட்டு கிட்டே இருக்கு காதுலே
சட்டு புட்டுனு வாயேண்டி செல்லம்
நோட்டு புக்கு முழுசும் உன்பேர
சொட்ட சொட்ட நனைஞ்ச ராத்திரிலே
நட்ட நடுநிசி வானத்தை பாத்து
முட்டி வரும் கண்ணீர அடக்கி
முத்து முத்தா எழுதி வச்சிருக்கேன்
பட்டு சேலை கட்டி வந்துநீ
மெட்டி அணிஞ்சி மண மேடைலே
கட்டிய தாலி் சரடு நானாக
ஒட்டி உரசி கதை பேசுவோம்
எட்டி நடை போட்டு வருவாயா
வட்ட நிலா வானத்துலே வரதுக்குள்ள

கருத்துகள் இல்லை: