வெள்ளி, 24 மார்ச், 2023

டிசம்பர் புயல்

 டிசம்பர் என்றாலே புயல் மழை ஆச்சுது

வசமா கிடைச்சது நம்ம ஊரு பீச்சு
மான்டோஸ் என்று பேர வச்சு உட்டாங்க
மாறிப் போயிடு புயலே திசைய மாத்தி
காத்தும் கடலும் நல்ல நண்பர்கள் தானே
பாத்து செய் பரிதவிக்க விடாத மக்கள
வச்சு செஞ்சுடாத வேதனைல தள்ளி விடாதே
நானும் வாரேன் உன் ஊரு பக்கமா
நல்ல படி உக்காந்து பேசித் தீர்ப்போம்
ஊரு முச்சூடும் தண்ணி முறிஞ்ச மரங்க
ஊதக் காத்து சத்தம் நல்லா இல்லை
அமைதியா உக்காந்து அரபிக் கடல் ஓரம்
அடுத்த வருஷம் பத்தி அலசி ஆய்வோம்
மறக்காம வந்துடு மனசு மாறிப் போவாதே
மறந்தும் உன் வேகம் இக்கரைல காட்டாதே !

கருத்துகள் இல்லை: