வெள்ளி, 24 மார்ச், 2023

கயவர்கள் கூட்டம்

 அக்ரகாரத் தெருவிலே அவன் நடந்தால் குற்றம்

பக்கத்து வீடானாலும் என் வீட்டில் அந்நியன்
தொட்டு விட்டாலோ தீட்டு வார்த்தையில் திட்டு
பட்டது பலவுண்டு பகரவே கவிதைத் துகள்
கணவனை இழந்தாலே அமங்கலம் அவளைக் காணாதே
கயவர்கள் கூட்டம் கருணை இழந்த நாட்கள்
பெண்கள் என்றாலே அடிமைகள் ஆணின் ஆணவம்
கண்கள் இழந்த குருடர்கள் கற்பு பெண்ணுக்கே
காலில் செருப்பில்லை தலை குனிந்தே நடை
தோலில் கறுப்பு நிறம் யாருடைய குற்றம்
அடிமைகள் என்றே ஆனதுவே மனித இனம்
தடிகளால் தாக்கியும் விலங்குகள் போல் வாழ்வு
மாற்றியது தவறென்று வாதாடும் பேய்க் கூட்டம்
மாக்களாய் சிலரும் மந்தைகளில் சேர்ந்தே இருப்பர்
மறப்பரோ பழையன இவை என்றும் காயம்
பறப்பது எதற்கோ பாவிகள் மீண்டும் சாக்காட்டுக்கு !

கருத்துகள் இல்லை: