வெள்ளி, 24 மார்ச், 2023

Operation Cockroach

பல மாதங்களாகவே இந்த கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகக் காணப்பட்டது. சீனாவிலிருந்து பத்துக் குள் ஒரு எண்ணில் இளைய மகன் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தபோது விலையில்லா உயிரினமாக எங்கள் வீட்டில் நுழைந்தது.

ஒன்று நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரம் இலட்சமாகி, இப்போது கணக்கிலடங்கா எண்ணிக்கையில். வளர்ப்பு உதவி மனைவியின் வேண்டத்தகாத பல பொருட்கள் சமையலறையில். பணம் இப்படிப் பெருகுமாயின் விக்ரம், PS I, லவ் டுடே, காந்தாரா படங்கள் எடுக்காமலே சம்பாதிக்கலாம்.
இவற்றோடு போரிட பல வியூகங்கள் மனதில் கூகுள் அண்ணனின் ஆலோசனைகள் முதலில் முயற்சி செய்யப்பட்டது. சோடா மாவு, நாப்தலீன் உருண்டைகள் இல்லாத இடங்களில் அடைக்கலம் தொடர்ந்தது. மாஸ் கில்லிங் என்ற கொலை பாதகச் செயல் தவிர வேறு வழி சரிப்படாது என்று முடிவெடுத்து சிவப்பு ஹிட் அடிக்க ஒனறுக்கு இரண்டாக இருப்பதில் பெரிய உருளை வாங்கியாயிற்று. அடுத்து போர் முனைத்தேர்வு, எதிரிகளின் கொரில்லாப் போர் முனை, போரிடும் நேரம் எல்லாம் குறித்தாயிற்று.
நாள் திங்கள், இரவு பத்து மணி முதல் நாள் போர், அட்டாக் மட்டுமே, இடம் சமையலறை. அடித்து முடித்து பார்த்தபோது ஒரு உருளை காலி. இன்று போய் நாளை வருகிறேன் என்று சொல்லி உறங்கச் சென்ற போது போர்க்களத்தில் தப்பிய சில போராளிகள் எனது படுக்கை அறையில் நுழைந்திருந்தது கண்ணில் பட்டது. ஒன்றிரண்டு கரப்பான்கள் என் மீது ஏறி படுக்கையில் பயமுறுத்தவும் முயற்சித்தன.
காலையில் எழுந்து சமையலறையைப் பார்த்த போது பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்திருந்தது. இறந்தவர்களை அப்புறப்படுத்தி டாய்லெட்டில் கொட்டி ப்ளஷ் செய்வதே சிறந்ததென, ஆப்பரேஷன் கிளீனிங் நடந்தது. பிற்பகலுக்குப் பிறகு பார்த்தால் மீண்டும் பல இடங்களில் நடமாட்டம் காண முடிந்தது, கதவுகளில் மேல் பக்கம், பிளாஸ்டிக் கண்டெய்னர்களின் கீழ்ப்புறம், கப்போர்ட் கதவுகளின் உள்பக்கம் என புத்தி உபயோகித்து ஒளிந்திருந்தனர் எதிரிகள். ஒரு நாள் விட்டு திரும்பவும் இரண்டாம் உருளை பயன்படுத்தி ஸ்பிரே செய்து மறுநாள் காலை பார்த்தபோது சொற்ப கரப்பான்களே இறந்திருந்தன.
அடுத்த நடவடிக்கை எங்கெல்லாம் மறைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து இன்னொரு உருளையும் வாங்கி போர் தொடர வேண்டும். ஆப்கன், வியட்நாம் போர்களைப் போல பல நாட்கள் ஆனாலும் இந்தத் தாலிபன்களை முழுதுமாக அழிப்பது கடினமே. வேண்டாத பொருள்களை அகற்றுவது, சமையலறையில் முடிந்த மட்டும் உணவுப் பொருட்கள் சிந்தாமலிருப்பது, பொருட்களை அடைப்பு போல் வைக்காமலிருப்பது போன்ற உத்திகள் ஒரு வேளை உதவலாம்.
இவை சிறிய வகை
குட்டிகள் எறும்பளவே..
இவை இருக்கும் இடங்களில் பெரிய கரப்பான் பூச்சிகள் வருவதில்லை.

கருத்துகள் இல்லை: