வெள்ளி, 24 மார்ச், 2023

ஆணினமே

 ஆணென்ன செய்தானோ என்றவரே கேளும்

ஆட்டுவிக்க ஆடுகின்ற பொம்மை அல்ல
காலம் எல்லாம் கடன் பட்டே
காரியம் ஆற்றி நிற்பான் பிறருக்காய்
உறவு துறந்து ஊர் சுற்றி
துறவு நிலை கொண்டே பலநாளும்
பெண்ணோ மகவைச் சுமந்து மகிழ்வாள்
ஆணோ குடும்பம் சுமந்து உவப்பான்
காலச் சக்கரம் உருண்டோட அச்சாணி
கால்களில் சக்கரமாய் இவன் மேனி
இரவு பகல் பாராத பெருமகன்
இவனது உழைப்பே இணைக்கும் பாலம்
இல்லாது இன்பம் போகும் இவனின்றி
கல்லான உடம்பாய் கடும் உழைப்பு
வில்லாக வளைந்தே உயரும் வாழ்க்கை
தாயும் ஆவான் பல சமயம்
சேயான மகள் இவன் தாயாவாள்
பாசம் பலகோடி மனதில் மறைந்தே
நேசமான நண்பர் இவன் துணை
மலர்ந்த முகமே இவன் சொத்து
மகனே என்ற நாளில் இருந்து
ஆண்டுகள் உருண்டோட தேகம் முதிர்ந்தே
ஆணினமே இன்றல்ல என்றுமே உன்தினமே

கருத்துகள் இல்லை: