வெள்ளி, 24 மார்ச், 2023

புறப்படு இளைஞா

 புறப்படு இளைஞா புறப்படு

புதியதோர் பாரதம் காணப் புறப்படு
முதியவர் வேண்டாம் புதியவன் நீ புறப்படு
சமுதாயச் சாக்கடை அடைப்பை உடைத்திடு
சாதிமத பேதங்கள் தீயிட்டுக் கொளுத்து
போராட உன் இளரத்தம் வேண்டும்
மேலிருந்து அல்ல கீழிருந்து தொடங்கு
உழவுக்கு உறுதுணையாய் நில்
ஊருணி நீர் ஆறுகுளம் ஏரி ஆழப்படுத்து
சாலைகள் சமன் செய் மரங்கள் அருகே நடு
மாநிலமெங்கும் தலைவனாய் நீயே ஆகு
வறுமையை ஒழித்து வளம் பெறச்செய்
எல்லோரும் உழைக்கச்செய் இலவசம் ஏதுமின்றி
இருக்க இருப்பிடம் கல்வி மருத்துவம் அனைவர்க்கும்
சமமாய் கிடைத்திட வகை செய்
குற்றங்கள் செய்வோர்க்கு கடும் தண்டனை உடனுக்குடன்
ஊழல் களைந்துவிடு உழைப்புக்கு ஊதியம்
அனைத்துத் துறையும் அதிவேக முன்னேற்றம்
ஏழை பணக்காரன் பேதமின்றி யாவரும் சமமாய்
சாட்டையை எடு சுழற்றிடு இன்றே புறப்படு !

கருத்துகள் இல்லை: