வெள்ளி, 24 மார்ச், 2023

வாழ்வை கண் திறந்து பாரீர்

 ரோஜாவைச் செடியில் கண்டேன்

அருகே நெருங்கி ஆசையாய்த் தொட்டதும்
முள்ளொன்று விரல்கைளக் காயப் படுத்தியது
சிறுகவி பெருகவியாக வேண்டுமோ
தொட்டது ஒன்று குத்தியது ஒன்று
பட்ட பிறகே பத்தும் புரிந்தது
சுடும் என்றும் தெரிந்தும் விட்டில்
படும் நெருப்பில் அழிந்தே போக
அழகாய் இருப்பது ஆபத்து உண்டு
பழகிய பிறகு பதறுவது ஏனோ
சொல்வது கேட்க செவிகள் இல்லை
சொல்லும் சொல்லுக்கு மதிப்பும் இல்லை
வீழ்ந்த பிறகே தெரியும் உண்மை
வீரம் பேசியே வீணான காலம்
தாழ்வில் தெரிந்து என்ன பயன்
வாழ்வை கண் திறந்து பாரீர் !

கருத்துகள் இல்லை: