வெள்ளி, 24 மார்ச், 2023

பாடிய பாரதி

 தேடி நிதம் நல்மனதை நாடி நின்றேன்

பாடிய பாரதி மீசை தனைக் கண்ணுற்றேன்
வாடிய முகம் இன்னமும் ஊரெங்கும் பார்வையுற்றேன்
வாதம் தினமும் வஞ்சனை எங்கும் இன்னமும்
கனவுகள் மெய்ப் பட எத்தனை காலம்
மாற்றம் என்றோ தேடி நின்றேன் இன்றும்
சாதியப் பேய்கள் சூழ்ச்சி வலைகள் எங்கும்
பாரதிகள் ஒன்றல்ல பலரும் வேண்டும் போன்றே
ஏட்டினில் பேச்சினில் பாட்டினில் மட்டுமே போதுமோ
சமுதாய மாற்றம் நிகழ யுகம் வேண்டுமோ
மனித மனங்கள் மாறுதல் சாத்தியம் இல்லையோ
அவன் கண்ட கனவுகள் நினைவுகள் ஆகுமோ
வினாக்கள் தொடர்கதை விடைகள் தேடியே விடியல் தினமும்

கருத்துகள் இல்லை: