வெள்ளி, 24 மார்ச், 2023

பார்த்தீரோ தோழியரே

 தெள்ளத் தெளிந்த வெல்லப் பாகு

உள்ளம் பொங்க உவகைப் புன்னகை
கள்ளப் பார்வை கண் கோடியில்
பள்ளம் மேடு இழைந்த மேனி
சொல்லத் திகட்டா வனப்பும் கூடவே
மெல்லச் சிரிக்கும் நகைப்பின் ஓசை
கதைகள் பேசிடும் உதடு் பிரியாமலே
வதைக்கும் பாவை நடையில் துள்ளல்
பின்னல் அசைய பின்னழகு நடனமாட
கொலுசுச் சத்தம் கொஞ்சி விளையாட
கொள்ளை கொண்டே போனாளே என்னவளே
பார்த்தீரோ தோழியரே பாவியவள் உருவம்
பார்த்தே கண்கள் பூத்தே போயின

கருத்துகள் இல்லை: