வெள்ளி, 24 மார்ச், 2023

அழகு

 வானுக்கு நிலவு அழகு

மலருக்கு வண்ணம் அழகு
மானுக்கு கொம்பு அழகு
மயிலுக்குத் தோகை அழகு
கண்ணுக்கு மை அழகு
மலைக்கு மேகம் அழகு
கடலுக்கு அலைகள் அழகு
ஆற்றுக்கு நீரோட்டம் அழகு
காட்டுக்கு மரங்கள் அழகு
தெருவிற்கு கோலம் அழகு
காதுக்கு காதணி அழகு
காலைக்கு கதிரவன் அழகு
முகத்திற்கு புன்னகை அழகு
மனைவிக்கு தாய்மை அழகு
அன்னைக்கு மக்கள் அழகு
அரசர்க்கு நல்லாட்சி அழகு
நட்புக்கு தோழமை அழகு
கவிதைக்கு பொய் அழகு
வாழ்விற்கு அமைதி அழகு
சொல்லுக்கு குரல் அழகு
அழகுக்கு எது அழகு ?

கருத்துகள் இல்லை: