சனி, 13 ஜூலை, 2019

கூடி வாழ்வதே மேதகு தத்துவம்

உழைப்பாளி தினமதில் உறுதி ஏற்போமா
ஊருக்கு ஒரு குளம் உருவாக்குவோமா
சிறு காடொன்றை விதைத்து சிறப்பிப்போமா
சிறார் கற்க சிறு பள்ளி யொன்று
கூட்டுறவாய் வங்கி மளிகை காய்கறி
கூடி வாழ்வதே மேதகு தத்துவம்
நல்லவர் ஒருவரை நாமே தேடுவோம்
அவரவர் மதம் அவரவர் இல்லத்தில்
வயல்கள் தோறும் ஊரின் உணவுப் பயிர்
ஒவ்வொரு ஊரும் உறுதி கொள்வோமெனில்
உழைப்பு கூட்டாட்சி ஊழலை ஒழிக்கும்
உலகமே வியக்கும் உயர்ந்திடும் நாடு

கருத்துகள் இல்லை: