சனி, 13 ஜூலை, 2019

சைனா அனுபவம் 1

2005
இரண்டு மாசத்துக்கு ஒருமுறை சைனா போய்க்கிட்டிருந்த காலம். எல் &டி மூலமா மூணு தடவ போயிருக்கேன்.
கேட் வால்வ் தயாரிக்கிற கம்பெனிங்க, ஃபௌண்டரி இப்படி ஒவ்வொரு இடமா சுத்தனும்.
ஷாங்காய்,ஷூஜூ,யான்செங், செங்டு இதெல்லாம் ஊர் பேருங்க, 2008 லே போனத பிறகு சொல்றேன்.
ஒவ்வொரு முறை போய்ட்டு வரும்போதும் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூர்லே இரண்டு மூணு நாள் தங்கிட்டு தான் இந்தியா வருவேன். ஊர் சுத்தறுது எப்பவுமே பிடிச்ச விசயம்.
ஒரு முறை ஷாங்காய் லே சிங்கப்பூர் போக விசா அப்ளை பண்ணிட்டு பாஸ்போர்ட்டு தூதரகத்துலே கொடுத்து ஒரு ஸ்லிப் மட்டும் பெற்றுக் கொண்டேன்னு கொடுத்தாங்க.
மறு நாள் காலைல ஷாங்காய்லே இருந்து செங்டுக்கு பயணிக்க பாஸ்போர்ட் நகல் , பயணச்சீட்டு வச்சு போர்டிங் பாஸ் கொடுத்துட்டாங்க. பத்து மணிக்கெல்லாம் அங்கே சேந்து வால்வ் கம்பெனி மற்றும் ஃபவுண்டரிலாம் பாத்துட்டு சாயந்திரம் அஞ்சு மணிக்கே ஏர்போர்ட் லே என்னை விட்டுட்டாங்க. அப்பலாம் எங்க போனாலும் மொழி பெயர்க்க கல்லூரி படிக்கிற பசங்கதான் இருப்பாங்க.
ஏழு மணிக்கு செங்டுலேருந்து ஷாங்காய் விமானம். முன்னாடி போனதாலே கவுன்ட்டர் திறந்தவுடனே போய் பயணச்சீட்டு, பாஸ்போர்ட் நகல், தூதரக ஸ்லிப் கொடுத்து போர்டிங் பாஸ் கேட்டா அவன் என்ன ஏற இறங்க பாத்துட்டு‌ தூரத்துலே இருந்த பாதுகாப்பு அதிகாரிய பாருன்னு கைகாட்டறான். உள்ளே முதல் பக்.
அவன்‌ கிட்டே போனா மாண்டரின் பாஷைல என்னவோ சொல்றான். எனக்கு தெரிஞ்ச ஷியே ஷியே ஹவ்மா லாம் அங்க உதவலே. இன்னைக்கு மாட்னோம்டா நாமனு நினைச்சுகிட்டு அவன் கிட்ட‌ பாஸ்போர்ட் ஷாங்காய் தூதரகத்துலே இருக்குனு ஆங்கிலத்துலே சொல்ல அவனுக்கு அது புரியலே.
இதெல்லாம் தூரத்துலே இருந்து பாத்துட்டு இருந்த சீனத்து செக்யூரிட்டி தேவதை கிட்டே வந்தா, நல்ல வேளை நான் பேசுன ஆங்கிலத்தை் புரிஞ்சு கிட்டு அந்த இன்னொரு ஆபீசர் கிட்டே ஏதோ சொன்னா.அவன் போன்லே அவனோட மேலதிகாரி கிட்டே பேசினான்.
ஒரு வழியா உடன்பாட்டுக்கு வந்து போர்டிங் பாஸ் வாங்கி பாதுகாப்பு சோதனை முடிச்சு, பயணப்பட்டு நடுநிசி கடந்து ஷாங்காய் ஹோட்டல் அறைக்கு வந்து சேந்து பெருமூச்சு விட்டேன்.
அந்த பொண்ணு உதவிக்கு வராம இருந்தா கம்பி எண்ணி‌ இருப்போமோ அப்படின்னு யோசிச்சுக்கிட்டே பயணக்களைப்புலே தூங்கிட்டேன்.
இதே போல இன்னும் இரண்டு சந்தர்ப்பத்துலே நடந்த சம்பவங்களை இன்னொரு நாள் பார்க்கலாம்.
24.4.19

கருத்துகள் இல்லை: