சனி, 13 ஜூலை, 2019

பேதமை ஒழி

வேடிக்கை மனிதர்கள் வேதனை மனதில்
வெந்து சாம்பலாய் போகும் உடலே
வேற்றுமை பேசுதல் வாடிக்கை ஆச்சு
வேண்டுமா ஆண்டுகள் ஆயிரம் அறிவூட்ட
மானுடம் தழுவி மற்றதை மறக்க
மாற்று கிரகம் வேண்டுமோ சொல்
இறைவன் இயற்கை சக்தி எதுவாயினும்
இணக்கம் விட்டு பிணக்கம் ஏன்
அடிமை எவருமில்லை அனைவரும் சமமே
அற்ப மனிதா அறிவைக் கூர்மையாக்கு
அழித்தது போதும் அடஙகு அமைதியாகு
பேதமை ஒழி பேய்க்குணம் அழி
பேசியது போதும் செயல் படு
இனியும் மாற மனமில் லையேல்
இந்த உலகம் இல்லாமல் போகும்

கருத்துகள் இல்லை: