சனி, 13 ஜூலை, 2019

தூரம் ஆதாரம்

கனவுக்கும் நனவுக்கும் காத தூரம்
கற்பனைக்கும் கவிதைக்கும் ஏது தூரம்
பிறப்புக்கும் இறப்புக்கும் எட்டும் தூரம்
பிரிவுக்கும் அணைப்பிற்கும் அன்பே தூரம்
சொல்லுக்கும் செயலுக்கும் உண்டு தூரம்
சொல்லாத சொல்லுக்கு அமைதியே ஆதாரம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பலமைல் தூரம்
விதையிட்ட நெல்லுக்கு வாய்க்கால் நீரே ஆதாரம்
பெண்ணுக்கும் தாய்மைக்கும் அன்பே தூரம்
கண்களுக்கும் காதலுக்கும் உறவே ஆதாரம்
தமிழுக்கும் எனக்கும் ஏது தூரம்
தாய் போன்ற அவளே என் ஆதாரம் !

கருத்துகள் இல்லை: