சனி, 13 ஜூலை, 2019

உலக அமைதி வேண்டு

சாதி சமயங்களும் வர்ணங்கள் பார்ப்பதும்
வேற்றுமை பாராட்டலும்‌‌ வேதனையே விட்டொழி
சாத்திரங்கள் கூறிடும் சூத்திரங்கள் நல்லவை
தீயவை ஒழித்து திருந்தி வாழ்ந்திடு
ஊரினை உயர்த்திடு உழைப்பை மேற்கொள்
உன்மத்தம் உயிர்க்கொலை வேதங்கள் சொல்வதில்லை
உன்னையும் என்னையும் உயர்த்திப் பாடுபடு
நரகத்து வாசலை நாளும் தேடி
நசிந்திடும் உணர்வை பொசுக்கிப் புதைத்திடு
உலக அமைதி வேண்டு உத்தமனாயிரு

கருத்துகள் இல்லை: