புதன், 3 ஜூன், 2020

குழந்தைப் பருவம்

சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சிரிச்சு விளையாடும் செல்ல பாப்பா
பொம்மையோடு கொஞ்சும் சிறுவயது பாப்பா
பொல்லாத குறும்பு செய்யும் பாப்பா
பசி வந்தால் அழுதே அடம்பிடிக்கும்
மழலைக் குரலில் அம்மாவை அழைக்கும்
மண்ணைத் தின்னும் மரத்தைக் கடிக்கும்
வீடெங்கும் பொருளை வீசி விளையாடும்
விரல் சூப்பும் தவழ்ந்து ஓடும்
பேரன் பேத்தியாய் தாத்தா மடியில்
பேரானந்தம் கொண்டு கைகொட்டிச் சிரிக்கும்
குழந்தைப் பருவம் குறையில்லாப் பருவம்

கருத்துகள் இல்லை: