புதன், 3 ஜூன், 2020

தாமரைத் தோட்டம் பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம் ஆறு

இஞ்சீனியரிங் சீட் கிடைக்கிறது அப்ப கஷ்டமான விஷயம். அதனாலே எல்லோரும் ஏதோ ஒரு டிகிரி சேந்து சீட் கிடைச்ச பிறகு இங்கே கட்டிய பீஸை மறந்து பொறியியல் கல்லூரிக்குப் போவாங்க.
தமிழ் நாட்டுலே மொத்தமே எட்டு இஞ்சீனியரிங் காலேஜ் தான் அந்த நாட்கள்ளே. அதனாலே போட்டி அதிகம். அட்மிஷன் கிடைச்சு சேந்தப்ப கிண்டி பொறியியல் கல்லூரில என் பெயர் ஆங்கில எழுத்துக்கள் கடைசிலே வரதாலே D section வகுப்பு. முதன் முதலாக எங்க வகுப்பு லே பதினோரு பெண்கள். அதற்கு முன்பு வரை ஐந்துக்குள்ள இருந்தது. பெண்கள் பெரும்பாலும் மருத்துவம் படிச்சது மெதுவா மாறுச்சு.
ஐந்து வருடப் படிப்புலே முதல் இரண்டு வருடங்கள் பிராஞ்ச் இல்லாத பொதுவான பாடங்கள். ஆங்கில வகுப்பு லே இம்போசிஷன் எழுதினது ஞாபகமிருக்கு.
போகப்போக எங்க செக்க்ஷன் பெருசாச்சு. சேலம் போன்ற வேறு ஊர்கள்ளே இருந்து டிரான்ஸ்பர் ஆகி.
இப்போது கல்லூரி போக இரண்டு ரூட். சேத்பட் ட்ரெயின் பிடிச்சு சைதாப்பேட்டை போய் அங்கேயிருந்து பஸ்லே கல்லூரிக்கும் போறது. இன்னொன்னு டெய்லர்ஸ் ரோடுலே பஸ் பிடிச்சு நேரா கல்லூரி வாசலுக்குப் போறது.
ரேகிங் நடக்கும். ரவி அண்ட் ரவீந்திரன் ஜோடி ரேகிங் பண்றது ஃபேமஸ். டோப் சல்யூட், கற்பனைல வண்டியோட்றது, போற மாணவி கிட்ட பேரை கேக்கறது இப்படி ஏதாவது ஒண்ணு.ஹாஸ்டல்லே இருக்கவங்களுக்கு அதிகம்.
வகுப்புகள் வேற வேற பில்டிங் சப்ஜெக்ட் ஏத்த மாதிரி. வொர்க் ஷாப்னா பின்னாடி போகணும். கேன்டின் மெயின் பில்டிங் பக்கத்துலே, கிரவுண்ட் எதிர்லே.
நீச்சல் குளம்,லைப்ரரி,ஆடிட்டோரியம் இப்படி நிறைய பில்டிங்ஸ். ஆங்கிலேயர் காலத்து சிவப்பு வண்ண கட்டிடங்கள்.
நண்பர்கள் சின்ன குழுக்களாக. சுரேஷ்,கந்தசாமி,சோமசுந்தரம், விஸ்வநாதன் K N எங்க குரூப்லே. என் சி சிலேயும் சேர்ந்தேன். பெரேட், ரைபிள் சூட்டிங் லாம் இருக்கும். .303,மெஷின் கன் மீனம்பாக்கம் ரேஞ்ச்லே குறிபாத்து சுட்டது நல்ல அனுபவம்.

கருத்துகள் இல்லை: