புதன், 31 மார்ச், 2021

புதுமெட்டு

 அழகான தோப்புக்குள்ளே அஞ்சாறு தென்னமரம்

தென்னமர உச்சியில் இளநீரு காய்கள்
காய்கள பறிச்சு பாங்கா சீவித்தர
சீவிய இளநீரில் சில்லென்ற தெங்கின்நீர்
தெங்குநீர் இனிமை அன்றோ நண்பா
நண்பா நடைபயில போவோமா ஏரிக்கரை
ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே
பெண்ணா அவள் தேவதையா சொல்லுமய்யா
சொல்வதை நல்லதாய் சொல்வீரா செவிகுளிர
செவிகுளிர சேதிஒண்ணு வருமா இவ்வேளை
இவ்வேளை பனிமூடி கடுங்குளிரா இருக்குதய்யா
இருக்குற குளிருக்கு இதமான சூடேற்ற
சூரியன் வருவானா சூல்மேகம் கலைப்பானா
கலையட்டும் இருள்போர்வை கதிரவன் வரவாலே
வரவைக் கட்டியம் கூறி புள்ளினங்க
புள்ளினப் பாட்டுக்கு புதுமெட்டு போடுவோமா ?

கருத்துகள் இல்லை: