சனி, 5 செப்டம்பர், 2020

கற்பனை

 கற்பனைக்கு எல்லையில்லை எங்கும் செல்லும்

கடல்மீது தோணிகளோட்டி காதலைப் பாடும்
நிலவுக்குள் நுழைந்து குளிரைத் தேடும்
நீலவானத்தை கம்பளமாய் மடித்து வைக்கும்
வேகமாய் புரவியேறி காற்றாய்ப் பறக்கும்
மேகமாய் மாறிநின்று மலையைத் தழுவும்
காட்டுக்குள் பறவைகளோடு விலங்குகளோடு விளையாடும்
காலையோ மாலையோ இரவோ நேரமில்லை
நதியில் நீந்தும் அருவியில் நனையும்
விதியை மதியை எதையும் பாடும்
சோதனை வேதனை நல்வினை தீவினை
வாதங்கள் வேதங்கள் கீதங்கள் நாதங்கள்
எதையும் தொட்டுப் பார்க்கும் தொடரும்
கவிதைகள் படைக்கும் காவியம் மலரும்
புலவர் கவிஞர் புரட்சியும் தோன்றும்

கருத்துகள் இல்லை: