புதன், 19 மார்ச், 2008

போராட்டம்

கருவிலே உருவான குழந்தை உலகை காணும்போதே போராட்டம்
காலப்போக்கில் குழந்தை வளர்ப்பில் தாய்க்கு போராட்டம்
தந்தை என்பவன் தலைவனாதலால் குடும்பமே ஒரு போராட்டம்
தினம் தினம் தோன்றும் திருப்பங்கள் எல்லாம் போராட்டம்

போராட்டம் என்பதே வாழ்க்கையாய் போனதால் பொறுமை தொலைந்து போனது

பொல்லாத கோபம் போக்கிரியாய் உள்ளத்தை கெடுக்கும் போராட்டம் பெருகும்
சொல்லும் வார்த்தைக்கெல்லாம் வெவ்வேறு அர்த்தம் அதனால் அனர்த்தம்
சோதனையாய் உள்ளம் தவித்து போகும் சோகம் கவ்வும்

கடமை ஆற்றுதல் ஒரு தேவை அது ஒரு இலக்கு
காதல் என்பது ஒரு உணர்வு அது ஒரு இலக்கியம்
கடமை மட்டுமே கண்ணாய் காதலை வெறுத்திடுமோ
கண்களாம் அவை ஒன்று போனால் பார்வை என்னாகும்

அன்பு என்பதும் காதல் என்பதும் போராட்டமல்ல
அடங்கி போவதும் அடக்க நினைப்பதும் அல்ல – உணர்வு
ஆறுதல் தேடும் உள்ளங்கள் அகத்திலே அன்பு தேடும்
ஆசைகள் அன்பின் வெளிப்பாடுதானே , பேராசை மட்டுமே பெருநட்டம்

உலக வாழ்க்கை உயிர் இருக்கும் மட்டும் அதற்குள் எத்தனை போராட்டம்
உருவான போதில் தோன்றும் போராட்டம் நீண்ட உறக்கம் வரை தொடரும்

உணவுக்கு ஒரு பக்கம் உரிமைக்கு மறுபக்கம்
பதவிக்கு ஒரு பக்கம் பாழும் பணத்துக்கு மறுபக்கம்

போராட்டமே வாழ்க்கையென்று துவண்டிடாதே பெண்ணே !
பெரும் சோதனை தாங்கிய உள்ளம் துச்சமாக்கும் எதையும்
பொறுமை உனக்கதிகம் புத்திகூர்மையும் உண்டு உண்டு
புத்துணர்வை புதுபொலிவை தொடர்ந்து செல் தோல்வியில்லை !

புரிந்துணர்தல் இருந்து விட்டாலே புல்லும் ஆயுதமாம்
புவியினில் பிறந்த நமக்கும் போராடி வெல்லுதல் தேவைதானே ?
உனக்கு நானும் எனக்கு நீயும் என்றான பின்னே
உறுதியாய் எதையும் எதிர்கொள்வோம் நாமே !

கருத்துகள் இல்லை: