வியாழன், 29 மார்ச், 2007

யதார்த்தம் ...

யாதர்த்தமாய் பேசுவதில் கவிஞனுக்கு உடந்தையில்லை.
உள்ளதை உள்ளவாறே பார்க்கும் போது அதில் அத்தனை இன்பமில்லை .
அது வாழ்க்கை கல்வி எனப்படுகிறது .
வாழ்க்கை அனுபவம் என்பது வேறு .
கற்பனை வளம் என்பது வேறு .

தினம் தினம் வாழ்க்கையில் நடப்பதை விட்டு
மற்றவர் கற்பனையில் திளைக்க நாம்
நாவல்களையும் , திரை காவியங்களையும் நாடுவது போல
கற்பனை செய்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது .
குடிசையில் வாழ்பவன் குடிசை பற்றி மட்டுமே
நினைத்திருந்தால் அவனுக்கு வெறுத்துப் போய் விடுகிறது .

நாம் மனதில் என்ன நினைக்கிறோம் .
ஒரு மரங்களடர்ந்த கடற்கரையில் வெறும்
காலுடன் மணல் மேல் நடக்க வேண்டும் என்று
அப்படி நினைக்கும் போதே மானசீகமாக
நமது எண்ணங்கள் அங்கே போய் விடுகின்றன .

இரு அன்பு உள்ளங்கள் பேசும் போது , தங்க முலாம்
பூசிய மேலோட்டமான பேச்சு இருக்க கூடாது .
எனவே நாம் யதார்த்த உலகில் சில
நேரத்திலும் கற்பனை உலகில் சில நேரமும் சஞ்சரித்து வருவோம்
பொய்மை கலந்த எண்ணங்கள் நமக்கு வேண்டாம் நீ கூறியது போல் .

கருத்துகள் இல்லை: